×

நிக் ஜோன்ஸுடன் மோதலா? பிரியங்கா மறுப்பு

ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து மணந்தார் பிரியங்கா சோப்ரா. இருவருக்கும் இடையே கருத்து மோதல் என லண்டன் மீடியா செய்தி பரப்பியது. ஆனால் இதை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது படிக்கட்டிலிருந்து தவறி விழப்போன பிரியங்காவை நிக் ஜோன்ஸ் கைத்தாங்கலாக பிடிக்கிறார். பிறகு இருவரும் புன்னகைக்கிறார்கள். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பிரியங்கா, ‘பொறாமைக்காரர்களுக்கு இதுதான் பதில்’ என அதிரடியாக கூறியுள்ளார்.

Tags : Nick Jones ,Priyanka ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...